இந்த காலத்தை பொறுத்தவரை பெரும்பாலும் யாரும் வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது இல்லை. அதற்கு பதிலாக பெரும்பாலும் கடையில்தான் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றோம். அந்த வகையில் இன்று அதிக ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய முளைகட்டிய பாசிப்பயறு தொழிலை பற்றிதான் தெரிந்துகொள்ளப் போகிறோம். ஆகையால் இந்த தொழிலை மட்டும் செய்தால் போதும் வெறும் 2 மணி நேரத்தில் கைநிறைய லாபம் பார்க்கலாம்.
இத்தகைய தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக ரூ.5000 இருந்தாலே போதுமானது. இதற்கு பாசிப்பயறு, பிளாஸ்டிக் அல்லது சில்வர் பிளேட், பேக்கிங் கவர் மற்றும் வீட்டின் சிறிய முன் பகுதி அல்லது வாடகைக்கோ அல்லது சொந்தமாக தள்ளு வண்டி இருந்தால் போதும். வேண்டுமானால் இந்த தொழிலை தொடங்குவதற்கு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஒரு பகுதி மட்டுமே போதுமானது.
செய்முறை என்று பார்த்தோமென்றால் முதல் நாள் இரவு ஒரு கிலோ அளவிற்கு பாசி பயிரினை நன்றாக தண்ணீரில் ஊற வைத்துவிட வேண்டும். அதன் பின்பு மறுநாள் இரவு அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டிவிட்டு ஒரு காட்டன் துணியில் காற்று புகாத அளவிற்கு நன்றாக கட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்து மறுநாள் காலையில் பார்த்தால் பாசிப்பயறு தயார் ஆகிவிடும்.
அப்படி தயார் செய்து வைத்துள்ள முளைகட்டிய பாசிப்பயறை 100 கிராம், 200 கிராம் மற்றும் அரை கிலோ என பேக்கிங் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நீங்கள் தள்ளு வண்டி கடையினை காலையில் நடைபயிற்சி செய்யும் இடம், டீ ஸ்டால், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாப் என அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம். அதுமட்டும் இல்லாமல் டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் ஒரு இடம் கிடைத்தால் இதனை விற்பனை செய்யலாம்.
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள பயிரின் விலை அரை கிலோ ரூ.55, 100 கிராம் ரூ.11 என்றும் 200 கிராம் ரூ.22 என்றும் தோரயமாக விற்பனை செய்யலாம். அப்படியென்றால் ஒரு நாளைக்கு தோராயமாக 3 பாக்கெட்டுகளிலும் 20 பாக்கெட் விற்பனை செய்தால் தோராயமாக கிடைக்கும் தொகை ரூ.1760. இதை 2 மணி நேரத்தில் சம்பாதித்து விடலாம்.