ஆதார் கார்டில் புது வசதி
தற்போது ஆதார் கார்டு என்பது அனைத்து இடங்களிலும் அத்தியாவசிய ஆவணமாக மாறி விட்டது. அதேசமயம், ஆதார் கார்டில் மொபைல் எண் மற்றும் ஈமெயில் சரியாக இணைக்காமல் ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமலும், ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை என ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என மக்கள் பயத்தில் உள்ளனர்.
தற்போது, பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அனுமதி அளித்துள்ளது.
ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/அல்லது mAadhaar செயலியில் ‘மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்’ என்ற அம்சத்தின் கீழ் இந்த வசதியைப் பெறலாம்.
குறிப்பிட்ட மொபைல் எண் அவர்களது ஆதாருடன் இணைக்கப்படாத பட்சத்தில் அதனைத் தெரிவிப்பதோடு, அவர்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் அதில் அறிந்து கொள்ளலாம். ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை என்றால், mAadhaar தளம் மற்றும் mAadhaar செயலியில், அவர்கள் கொடுத்த மொபைல் எண்ணின் கடைசி 3 இலக்கங்களைப் பார்க்க முடியும்.
மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கவோ, புதுப்பிக்கவோ விரும்பினால் மக்கள் அருகில் உள்ள சேவை ஆதார் மையத்தை அணுகலாம். பொதுமக்களுக்கு ஆதார் அப்டேட் செய்ய சமீபத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, ஆதார் கார்டு தகவல்களைப் புதுப்பிக்க ஜூன் 14 வரை கட்டணம் செலுத்தத்
தேவையில்லை என்று அறிவிக்கப்பட்
டுள்ளது.