அரசின் இலவச நிலம் வேண்டுமா?
நமுனா என்பது ஒரு நோட்டீஸ். ஒரு நிலம் ஒதுக்கீட்டு ஆணை. இது பட்டா கிடையாது. இது வெறும் ஒதுக்கீட்டு ஆணை மட்டுமே. ஆனால் மக்கள் வழக்காடு மொழியில் பட்டா என்கிறார்கள். அதாவது நீங்கள் குடியிருக்க அல்லது விவசாயம் செய்ய இலவச நிலம் வேண்டி அரசுக்கு வைத்த கோரிக்கை.
அந்த கோரிக்கை அரசு இயந்திரத்தின் காதில் ஏறி, உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு அரசு உங்களுக்கு நிலம் இன்ன இடத்தில், இன்ன அளவுகளில் இடம் கொடுக்கிறது என்று சொல்லும் நோட்டீஸ் தான் எச்எஸ்டி நமுனா.
உங்களுக்கும் இலவச நிலம் வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை உங்கள் கிராமத்தில் இருக்கும் அரசு காலி இடம் அதாவது அரசு புறம்போக்கு நிலத்தின் பட்டியலை ஆர்டிஐ-யில் உங்கள் கிராம விஏஓ அல்லது தாசில்தாரிடம் கேளுங்கள். வீட்டு மனை என்றால், வெறும் 3 சென்ட் தான் கொடுப்பார்கள்.
இது ஒரு தற்காலிக பட்டா. அதை பெற்றவர் ஒரு வருடத்திற்குள் நிரந்தர பட்டா வாக மாற்றி இருக்க வேண்டும். மனை என்றால் பெண்கள் பெயருக்கு தான் கொடுப்பார்கள். அதில் ஒரு நிபந்தனை உண்டு. 10 வருடம் கழித்து தான் விற்க முடியும். அதற்குள் விற்றால் அது செல்லாது.
10 வருடத்திற்கு கீழாக விற்க வேண்டி வந்தால் கலெக் டர் அல்லது தாசில்தாரிடம் என்ஓசி வாங்க வேண்டும். வீடு கட்டாயமாக கட்டி இருக்க வேண்டும். இல்லே யேல் அரசாங்கம் திருப்பி எடுத்துக்கொள்ளும். அது விவசாய நிலமாக இருந்தால் அல்லது உங்களுக்கு கொடுக்கும்போது விவசாய நிலமாக இருந்திருந்தால் அதை “என்ஏ லேண்டு” என நிலத்தின் வகைபாடு மாற்ற வேண்டும்.
எச்எஸ்டி நமுனா வின் சர்வே நம்பர் விஏஓ ரிகார்டின் பட்டா/ சிட்டாவுடன் பொருந்தி போக வேண்டும். அதாவது விற்பவரின் முழு பெயர், தந்தை பெயர் மற்றும் சர்வே நம்பர்கள், அளவுகள், எல்லைகள் ஆகும்.
நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைப்புகள் மற்றும் நீண்ட கால நிலக் குத்தகைகள் பதிவேடு 8 பிரிவுகளாக பராமரிக் கப்பட வேண்டும்.