ஆர்டிஜிஎஸ் 24 மணி நேர சேவையினால் கிடைக்கும் நன்மை..!
ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் என்று கூறப்படும் ஆர்டிஜிஎஸ் சேவையானது தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலான கால வரையறைக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஆர்டிஜிஎஸ் சேவையினை வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 14ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் சேவையானது 24 மணி நேரமும் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பணப் பரிமாற்றத்தின் அளவீடு அதிகமாக இருக்கும் இந்தச் சேவைக்கு எவ்விதமான கட்டணமும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு. இதனால் மக்கள் தங்களது நெட்பேங்கிங் சேவையின் கீழ் இந்த ஆர்டிஜிஎஸ் சேவையை ஜீரோ கட்டணத்தில் பயன்படுத்த முடியும் என்பதால் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.