Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சாலையோர உணவகங்களை குறிவைக்கும் ஸ்விக்கி..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சாலையோர உணவகங்களை குறிவைக்கும் ஸ்விக்கி..!

இந்தியாவில் சாலையோர உணவகங்களுக் கென மிகப் பெரிய வர்த்தகச் சந்தையும், வாடிக்கையாளர் கள் கூட்டமும் உள்ளது.  இந்நிலையில், ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி சாலையோர உணவகங்களுக்கு உதவும் வகையிலும், அவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்களைத் தனது ஸ்விக்கி தளத்தின் வாயிலாகக் கொண்டு வரவும், மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது ஸ்விக்கி.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

மத்திய அரசு மற்றும் ஸ்விக்கி இணைந்து செயல்படுத்தப்படும் Prime Minister Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) என்ற இந்த திட்டத்தின் கீழ் நாட்டின் 125 நகரங்களில் இருந்து சுமார் 36,000 சாலையோர உணவகங்கள் மற்றும் சாட் கடைகள் ஆன்லைன் தளத்திற்கு கொண்டு வருகிறது. இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய சாலையோர உணவகங்கள் கடைகள் திட்டமாக இருக்குமாம்.

இந்தியாவின் உணவு சந்தை சுமார் ரூ.4,236 பில்லியன் மதிப்பிலான சந்தை வர்த்தகத்தைக் கொண்டுள்ளது. இதில் சாலையோர உணவகங்கள், தின்பண்ட கடைகள், சாட் கடைகள் மட்டும் மொத்த உணவு சந்தையில் சுமார் 50 சதவீத சந்தையான ரூ.2,519 பில்லியன் சந்தையைக் கொண்டுள்ளது. இந்த மாபெரும் சந்தையைத் தான் தற்போது ஸ்விக்கி தனது தளத்திற்குள் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.