திருச்சிராப்பள்ளி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (TIDITSSIA) மற்றும் உருமு தனலட்சுமி கல்லூரி இணைந்து தொழில்முனைவோருக்கான பயிலரங்கு ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.
“தொழில் முனைவோர் – நேரத்தின் தேவை” என்ற தலைப்பில் கடந்த செப்டம்பர் 11 புதன்கிழமை அன்று கல்லூரியின் A.V ஹாலில் நடைபெற்ற இப்பயிலரங்கிற்கு உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வர் முனைவர் இ.ஆர்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
உருமு தனலட்சுமி கல்லூரிக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.ராமலிங்கம், செயலாளர் ஸ்ரீ கல்கி ராமகிருஷ்ணன்,பொருளியல் துறைத் தலைவர் முனைவர் என்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிலரங்கின் அமைப்புச் செயலர் லெப்டினன்ட் டாக்டர் எஸ்.ஞானப்பிரகாசம் வரவேற்புரையாற்றி பயிலரங்கை ஒருங்கிணைத்தார்.
இப்பயிலரங்கில் TIDITSIA இன் தலைவர் P. ராஜப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
TIDITSIA இன் துணைத் தலைவர்களான P. தேவராஜ் மற்றும் R. சண்முகம் ஆகியோர் இன்றைய பொருளாதார சூழலில் தொழில்முனைவோரின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்கள்.
வணிக உலகில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்துகொள்வதற்கு ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு இந்த பட்டறை ஒரு தளத்தை வழங்கியது. மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தொழில்முனைவோரின் முக்கிய பங்கையும் வலியுறுத்துவதாக அமைந்தது.
இப்பயிலரங்கில் சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பொருளியல் துறைத் தலைவர் டாக்டர் என்.கண்ணன் நன்றியுரை மற்றும் அதனைத்தொடர்ந்து தேசிய கீதத்துடன் இனிதே நிறைவடைந்தது.
தகவல்:
சண்முகம் , TIDITSSIA.