Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பார்ட்னர்ஷிப்பில் வீடு கட்டலாமா..?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பார்ட்னர்ஷிப்பில் வீடு கட்டலாமா..?

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

  • வீட்டுக் கடன் கேட்பவர்கள் பார்னர்ஷிப் கடன்தாரர்கள் எனில் கடனுக்கான அனுமதியினை வங்கி விரைந்து வழங்குகிறது.
  • இந்த பார்னர்ஷிப் என்பது கணவன், மனைவி, தந்தை, தாய், மகன், திருமணமாகாத மகள், தாயின் சகோதரர்கள் இப்படியாக இருப்பவர்கள் பார்ட்னர்ஷிப் எனில் வங்கி அவர்களை வரவேற்கிறது. இப்படியாக இணைந்து வீட்டுக் கடன் கேட்கும் போது ஒன்றுக்கு மேற்பட்டோரின் வருமானத்தின் அடிப்படையில் கூடுதல் கடன் தரவும் வங்கி சம்மதிக்கிறது.
  • பார்ட்னர்ஷிப் எனில் கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் குறைவதால் வட்டியும் குறைகிறது. சில வங்கிகள் வட்டி விகிதத்தையும் குறைத்துக் கொள்கிறது. பார்ட்னர்ஷிப்பாக கடன் கேட்போரின் வருமானத்திலிருந்து அதிகபட்சமாக 50 முதல் 60 சதவீதம் வரை வங்கி, கடன் தர சம்மதிக்கிறது என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி மற்றும் 24 பி ஆகியவை வீட்டுக் கடன்களில் கடன் வாங்குபவர்களுக்கு சில வரி சலுகைகளை வழங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிரிவு 24 பி இன் கீழ் பார்ட்னர் பெற்ற வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு ரூ .2,00,000 வரை கழிக்க தகுதியுடையவராகிறார்கள். இச்சலுகைகளை பார்ட்னர்கள் தனித்தனியாக அனுபவிக்க முடியும்.
  • பார்னர்ஷிப்பில் வீட்டுக் கடன் வாங்குவதில் உள்ள அதிகபட்ச ரிஸ்க் என்னவெனில் கடன் முடியும் காலம் வரை இருவரும் கடன் செலுத்துவதில் சுணக்கம் கொள்ளக் கூடாது. மீறினால் இருவருமே தனித்தனியாக வேறு வகையான கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அது இருவரையும் பாதிக்கும். அதாவது கடன் நிலுவை ஏற்படும் போது இருவரின் சிபில் மதிப்பெண்ணும் குறைந்து கடன் பெறுவதற்கான தகுதியை இழக்கிறார்கள்.
  • கடன் பெற்ற இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோரில் ஒருவர் இறந்துவிட்டால் மற்றவர்கள் கடன் தொகையை இணைத்து கட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும். எதிர்கால ரிஸ்க் குறித்து ஒரு திட்டமிடல் உங்களிடம் இருந்தால் பார்ட்னர்ஷிப்பில் வீட்டுக் கடன் பெறுவது பெரும் நன்மையை அளிக்கும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.