புதிய வகை பெட்ரோல்..! எக்ஸ்-பி 100
உலகத்தரம் வாய்ந்த உயர்தர எரிபொருளாக விளங்கும் எக்ஸ்-பி 100 என்று அழைக்கப்படும் ஆக்டேன் 100 என்னும் புதிய வகை பெட்ரோலினை சமீபத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தியுள்ளார்.
புதிய வகை பெட்ரோலின் உயர்தர எரிபொருளின் தொழில்நுட்பம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்றும் இது மிகவும் பெருமை அளிக்கும் விஷயம் என்றும் கூறியதோடு இந்தியாவின் பெட்ரோலிய எரிபொருள் சில்லரை வர்த்தக சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடியது என கூறியிருக்கிறார். முதற்கட்டமாக நாட்டில் உள்ள 10 மாநகரங்களில் இப்பெட்ரோலை அறிமுகப்படுத்தப்படுகிறது.