“டிஜிட்டல் பரிவர்த்தனை” இனி இந்த இரண்டும் கட்டாயம்…
இன்னும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டுமென ரிசர்வ் வங்கி RBI புதிய விதிகளைக் கொண்டு வந்திருக்கின்றது.
இன்று டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் எங்கு எப்போது வேண்டுமானாலும் , எவ்வளவு வேண்டுமானாலும், பணப்பரிவர்த்தனை செய்துக்கொள்ளலாம் என்கின்ற நிலை உள்ளது. பேருந்தில் பயணம் செய்ய பயணக்கட்டணம் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செய்துக்கொள்ளலாம்.
பத்து ரூபாய் முதல் லட்ச ரூபாய் வரை டிஜிட்டல் பரிவர்த்தனையில் செய்துக்கொள்ளலாம் என்கின்ற நிலையில் ,ஏற்கனவே இருக்கின்ற இந்த பரிவர்த்தனையானது பாதுகாப்பான முறையில் தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவற்றை, இன்னும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டுமென ரிசர்வ் வங்கி RBI புதிய விதிகளைக் கொண்டு வந்திருக்கின்றது.
இந்த விதிகளில் கீழுள்ள ஏதேனும் இரண்டு அம்சங்களை கட்டாயம் பயனாளர்கள் பின்பற்றியாக வேண்டும். அவை,
- PIN அல்லது PASSWORD
- ONE TIME PASSWORD – OTP VERIFICATION
- FINGER PRINT அல்லது FACELOCK
இவற்றில் ஏதேனும் இரண்டு அம்சங்களின் மூலமாக பயனர் உறுதிசெய்த பிறகே டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு செலுத்த முடியும்.
இந்த புதிய விதிகள் அடுத்த நிதியாண்டு ஏப்ரல் 1 2026 முதல் அமலுக்கு வருகின்றது.