வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு..!
2019&-20-ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற் கான காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது.
வருமான வரித்துறை நிதியமைச்சகத்தின் ஒப்பு தலுடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2019-20-ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யத் தனிநபர் பிரிவுக்கு வருகிற ஜனவரி 10, வரையும், நிறுவனங்களுக்கு பிப்ரவரி 15, வரையில் நீட்டிக் கப்பட்டு உள்ளது.
2019-20ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலக்கெடுவும் 2021, பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வருமான வரி ரிட்டர்னைத் தாமதமாகச் செலுத்துவோருக்கான அபராதத்தை இரு மடங்காக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு முன் ரூ.5 ஆயிரம் இருந்த நிலையில் அதை ரூ.10 ஆயிரமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.