பிசினஸ் திருச்சி வாசகர்களின் ஷொட்டுகள்…
பிசினஸ் திருச்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி போன்ற கூடுதல் தகவல்களை பதிவு செய்தால் மக்கள் பயன்பெற வசதியாக இருக்கும்.
மகேந்திரன், எடமலைப்பட்டி புதூர்
உடற்பயிற்சி – சர்க்கரை நோய் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு காலத்தில், செயின் இல்லாத சைக்கிள் பற்றிய கட்டுரை சிறப்பு. வேலை வாய்ப்புகள் குறித்த செய்திகள், விளம்பரம் செய்ய வேண்டியதன் அவசியம் எனப் பலவும் பயனுள்ளவை. ஆன்லைனில் எழுதி சம்பாதிக்கலாம் என்பது நல்ல வழிகாட்டி.
ஸ்டாலின், புத்தூர்.
செயின் இல்லாத சைக்கிள், சாலையோர உணவகங்களில் குறிவைக்கும் ஸ்விக்கி, வேலையை விட்டு தொழில் தொடங்க போகிறீர்களா போன்ற பல்வேறு வகையான வணிகம் சார்ந்த கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது.
-சம்பத், அரியமங்கலம்
பெட்ரோல் விக்கிற விலையில சைக்கிளே சிறப்புக்குரியது. அதுலயும் செயின் இல்லாத சைக்கிள் மிகவும் சிறப்பு. பிசினஸ் திருச்சியின் முதல் பக்கம் எப்பவுமே டாப்.
ரகுமான், புத்தாநத்தம்
சொன்னது 20 லட்சம் கோடி. தந்ததோ 3 லட்சம் கோடி செய்தி படித்தேன். நிதியமைச்சர் சொன்னது படிப்படியாக 20 லட்சம் கோடி செலவிடப்படும் என்று தான் கூறியிருந்தார். ஒரே ஆண்டில் தருவதாக சொல்லவில்லை. எனவே தலைப்பு தவறானது.
வேல்முருகன், துவாக்குடி
உங்கள் எண்ணங்களை பதிவிட
வாட்ஸ்அப் எண்
98424 10090