கட்டிய புதுவீடு வாங்குபவர்கள் கவனிக்க…
கட்டிய வீடு வாங்கு பவர்கள் வீட்டுக்கான பட்டா, மூலபத்திரம், வரி கட்டிய ரசீது இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். வீட்டின் பெயரில் வங்கியில் கடன் உள்ளதா என்றும், இருந்தால் அக்கடன் முழுவதும் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள அதற்குரிய ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்.
வீடு, மனை வாங்கி பாதுகாக்கப்படாமல் இருந்தால் மற்றவர்கள் அதனை பத்திரம் போட்டு விற்பனை செய்வதற்கான வழிகள் உள்ளது. எனவே ஆண்டுக்கு சில முறையாவது அதனை பார்த்து வர வேண்டும். வங்கி கடன் மூலம் வீட்டுக்கடன் வாங்குவதால் அக்கடனுக்கு வரிச்சலுகை உண்டு என்பதை அறியவும்.