வருமான வரிக் கணக்கு 5.95 கோடி பேர் தாக்கல்
கடந்த 2019-&2020 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தனிநபர்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 10 வரை வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2018&-2019 நிதியாண்டில் 5.67 கோடி பேர் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்திருந்தனர். ஜனவரி 10-ம் தேதி வரை (2019-&2020) 5.95 கோடி பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட சுமார் 30 லட்சம் அதிகமாகும்.
சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் தனிநபர் வருமான வரி கணக்குத் தாக்கல் குறைந்துள்ளதாகவும், நிறுவனங்களின் வருமான வரி கணக்கு தாக்கல் உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும்தனிநபர்கள் தாக்கல் செய்யும் ஐடிஆர்1 படிவம் 2.99 கோடிஅளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.