வியாபார வெற்றிக்கு கைகொடுக்கும் தொழில் அனுபவம்
- வியாபாரத்தைத் தொடங்குவதற்கு முன் சக வியாபாரிகளிடம் வியாபாரத்தின் தற்கால நிலை, எதிர்காலம் ஆகியன பற்றிப் பேசுங்கள்.
- பல புத்தங்களில் படித்துத் தெரிந்து கொள்வதை விட அந்த வேலையைச் செய்யும் ஒருவரிடம் பேசிப் பார்ப்பது நிறைய ஐடியாக்களைத் தரும்.
- சில ஆண்டுகளுக்கு முன்பு டெலிபோன் பூத் நடத்துவது இலாபகரமான தொழிலாக இருந்தது. ஆனால் இன்று அதன் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. எனவே தொழிலின் தற்போதைய நிலை என்பது மட்டும் இல்லாமல், எதிர்காலம் என்பதும் முக்கியமானது தான்.
- எல்லோருமே இப்போது செல்போன் வைத்திருக்கிறார்கள். எனவே ரீசார்ஜ் கடைகள் வைப்பது நிறைய இலாபம் தரும் என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் ரீசார்ஜ் கடைக்காரர்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் இருக்கலாம்.
- கறிக்கடை வைத்தால் நல்ல இலாபம் கிடைக்கும் என நமக்குத் தோன்றும். ஆனால் அதில் வரும் நடைமுறைச் சிக்கல்கள் என்னவென்று தெரியாமல் இருப்போம். எனவே போதுமான அளவு அனுபவங்களைத் தொழில் தொடங்குவதற்கு முன்பே திரட்டிக்கொள்ளுங்கள். அந்த அனுபவங்கள் பல நேரங்களில் நமக்குக் கை கொடுக்கும்.