வளர்ச்சியை நோக்கி ரியல் எஸ்டேட் துறை!
சுமார் 5 லட்சம் வீடுகள் பல்வேறு காரணங்களுக்காகக் கட்டிமுடிக்க முடியாமல் பாதியில் நிற்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. அதிகளவிலான வேலைவாய்ப்புகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாக்கி வரும் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள இந்த தேக்கத்தை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு சலுகை மற்றும் வளர்ச்சி திட்டங்கள் அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக 2021ல் ரியல் எஸ்டேட் துறை சிறப்பான வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முடங்கியிருக்கும் திட்டங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.