பழக தயங்கும் ஆபீஸ்வாசிகளுக்கு…
அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் அலுவலகம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டரையே பார்த்து கொண்டிருக்காமல், நேரில் செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட மெசேஜ் அனுப்பி விட்டு உட்காருவது, வேலை இல்லா நேரத்திலும் யாரிடமும் பேசாமல் தேவையில்லா மற்ற விஷயங்களை கவனிப்பது போன்றவற்றை தவிர்த்து சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஆராய வேண்டும்.
இதனால் மற்றவர்களின் திறமை, அவரது குணங்கள் உங்களுக்கு தெரியவரும். சில விஷயங்களில் நீங்கள் காட்டும் ஈடுபாடே உங்களை மற்றவர்கள் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.