வேலையில்லா இளைஞர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.12.2000ம் தேதியில் 5 வருடம் முடிந்த, முறையாக பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது தேர்ச்சி பெறாத மற்றும் +2, டிகிரி தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதிஉடையவர் ஆவார்கள்.
மாற்றுத்திறனாளிகள் : மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் 10, 12, டிகிரி தேர்ச்சி பெற்று பதிவுசெய்து 31.12.2020 அன்று ஓராண்டு முடிந்த பதிவுதாரர்கள் அனைவரும் தகுதியுடையவர் ஆவர். அதிகபட்ச வருட வருமானம் ரூ.72,000 மேல் இருக்க கூடாது.
பயன்தாரர் எந்த கல்வி நிறுவனத்திலும் பயில்பராக இருக்க கூடாது. ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் படிப்பை முடித்தவர்களுக்கு உதவித்தொகை பெற தகுதியில்லை. உரிய ஆவணங்களுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.