அரசு குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கு இ-சம்பதா இணையதளம், செயலி..!
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரசு குடியிருப்புகள், அரசு அமைப்புகளுக்கு அலுவலக இடங்கள், சமூக நிகழ்ச்சிகளுக்கான அரங்கங்கள் ஒதுக்கீடு செய்யும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காகவும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் மத்திய அரசின் எஸ்டேட்ஸ் இயக்குநரகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் இணைந்து இ-சம்பதா என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலியை உருவாக்கியுள்ளது.
ஒற்றைச் சாளர முறையில், அரசுக் குடியிருப்புகள், விடுதிகள், அரங்கங்களின் முன்பதிவுகள் இந்த செயலியின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எஸ்டேட்ஸ் இயக்குநரகத்தின் 4 இணையதளங்கள் (gpra.nic.in, eawas.nic.in, estates.gov.in, holidayhomes.nic.in) மற்றும் இரண்டு செயலிகள் (m-Awas & m-Ashoka5) ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
இதற்காக www.esampada.mohua.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான செயலியையும் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.