வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள்
நிறுவனங்களில் வேலை செய்யும் சம்பளதாரர் களுக்கு கடைசி 3 மாத சம்பள சிலிப், 6 மாத வங்கி பரிவர்த்தனை, வரிகணக்கு தாக்கல் செய்த விவரங்கள், பான்கார்டு, ஆதார் கார்டு, பணி நியமன கடிதம் ஆகியவைகளை வங்கிகளுக்கு வழங்க வேண்டும். சுயதொழில் செய்வோர், கடந்த 3 ஆண்டு வரி கணக்கு தாக்கல் அறிக்கை, ஓராண்டு வங்கி பரிவர்த்தனை விபரம் மற்றும் பான்கார்டு, ஆதார்கார்டு ஆகியவை வழங்க வேண்டும்.
இருபிரிவனருக்குமான விற்பனைக்கான ஒப்பந்தம், கட்டுமான ஒப்பந்தம், தாய் பத்திரம் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், குறைந்தபட்சம் 30 வருட வில்லங்க சான்று, அங்கீகரிக்கப்பட்ட பிளான், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, லீகல் ஒப்பீனியன் ஆகியவற்றை வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.