வால்வோ நிறுவனத்தின் முதல் பேட்டரி கார் அறிமுகம்
“பெட்ரோல், டீசலில் இயங்கும் சொகுசு கார்களுக்கான வரி விதிப்பு 45 சதவீத அளவிளான பேட்டரி கார்களுக்கு கிடையாது. இதனால் சொகுசு கார்களை வாங்குவோர் பேட்டரி கார்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தியாவில் தங்களது பேட்டரி கார் விற்பனை 80 சதவீத அளவுக்கு அதிகமாக இருக்கும் என்றும் உலக அளவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 50 சதவீத அளவில் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார். வால்வோ நிறுவனம் முதல் கட்டமாக எக்ஸ்சி-40 என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது.
பேட்டரியில் ஓடும் எஸ்யுவி மாடலாக வந்துள்ள இந்த கார் அதிக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர எக்ஸ்சி-60 மாடலுக்கான முன்பதிவை வோல்வோ தொடங்கியுள்ளது. இந்த மாடல் கார்கள் அடுத்த மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யப்படும்”. சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த வோல்வோ நிறுவனம் சென்னையில் தொடங்கிய புதிய ஷோரூம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட வோல்வோ நிறுவன நிர்வாக இயக்குநர் சார்லஸ் பிரம்ப் கூறியது.