தொழிலாளர் நலவாரியத்தின் புதிய நலத்திட்டங்கள்
தொழிலாளர்கள் நலநிதி செலுத்துவோருக்கு தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் புதிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அதில், “அரசு அங்கீகாரம் பெற்ற தையற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித் தொகை வழங்கப்படும் என்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் எழுதும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பயிற்சி உதவித் தொகை வழங்கப்படும்” என அறிவித்துள்ளது.
இந்த புதிய நலத்திட்டங்களில் பயனடைய விரும்பும் தொழிலாளியின் மாத ஊதிய உச்சவரம்பு அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்ந்து ரூ.25,000திற்குள் இருக்க வேண்டும். நலத்திட்ட உதவிகளை பெற விரும்புவோர் tnlwboard@gmail.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.