கரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..
வீடுகளில் கரையான், கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகமா உள்ளதா? ஹோட்டல், மெஸ் மற்றும் ஸ்வீட் ஸ்டால்களில் ஈ தொல்லையும், எலித் தொல்லையும் அதிகமா? கவலையை விடுங்கள். அவைகளை எங்களிடம் விட்டு விடுங்கள். நாங்கள் “கவனித்துக்” கொள்கிறோம். அதாவது நாங்கள் அவைகளை கவனித்துக் “கொல்கிறோம்” என்கிறார் கரூர், பாரதி நகர் கிழக்கில் (ஜாய் ஆலுக்காஸ் ஜுவல்லரியின் பின்புறம்) இயங்கி வரும் “ஆர்.ஜி. பெஸ்ட் கன்ட்ரோல் (R.G. PEST CONTROL)” நிறுவனத்தின் உரிமையாளர், தினேஷ்.
“இந்த நிறுவனம் தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?
பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனை நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு “ஆர்.ஜி. பெஸ்ட் கன்ட்ரோல்’ என்ற நிறுவனத்தை தொடங்கினேன். கரையான், கரப்பான் பூச்சிகள், ஈக்கள், எலிகளால் ஏற்படும் கேடுகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்கிற வருத்தம் என்னிடம் உண்டு.
வீட்டின் மூலை முடுக்குகளில் தங்கி தொல்லை கொடுப்பதோடு பலவித நோய்களை பரப்பும் காரணியாக உள்ளது கரப்பான், ஈ போன்ற பூச்சி இனங்கள். பொதுவாகவே வீடுகளில், சமையல் அறை மற்றும் கழிவுகள் தேங்கியுள்ள இடங்களில் அழையா விருந்தாளிகளாக புகுந்து இங்குமங்குமாக அலைந்து கொண்டிருப்பவை கரப்பான் பூச்சிகள்.
கரப்பான் பூச்சிகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று இந்தியன் கரப்பான் பூச்சி. இன்னொன்று ஜெர்மன் கரப்பான் பூச்சி. இந்த இரண்டு வகையானக் கரப்பான் பூச்சிகளுமே இந்தியாவில் குறிப்பாக நம் தமிழகத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன. எந்தப் பேரழிவிலும் அழிந்து போகாத பூச்சி இனங்களில் இந்தக் கரப்பான் பூச்சிகளும் கரையான்களும் இடம் பிடித்துள்ளன.
நம் வசிப்பிடங்களில் நம் உணவகங்களில் முடிந்தளவு அவைகளைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வது தான் நம்மால் இயன்ற ஒன்று. கரப்பான் பூச்சிகளை அழித்திட மூலிகைச் சாந்து உள்ளது. இந்த மூலிகைச் சாந்தினை அதன் உலவும் பகுதிகளில் பேஸ்ட் செய்து விடுவோம். இந்த சாந்தால் ஏதும் துர்நாற்றம் வீசாது. சுமார் ஒரு மாதம் வரை அந்த மூலிகைச் சாந்து செயல்பாட்டில் இருக்கும். சாந்தின் வாசத்தால் கரப் பான் பூச்சிகள் அப்பகுதிக் குள் வராது.
கரப்பான் பூச்சி களைப் போல் ஈத் தொல்லையும் நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது. பழங்கள் விளையும் பருவங்கள், மழைக் காலங்கள், குளிர் காலங்களில் ஈக்கள் மிக அதிகமாக உயிர்ப் பெருக்கம் அடைகின்றன. ஈக்களுக்கு இனிப்புச் சுவை மிகவும் பிடித்தமானது. அதிலும் பலாப்பழம், மாம்பழம் சீசன் வந்து விட்டால் போதும் அவைகளுக்கு மிகவும் கொண்டாட்டம் ஆகிவிடும். நமக்கு அதுவே பெரும் திண்டாட்டம் ஆகிவிடும்.
தரையில் சிதறும் உணவுக் கழிவுகள், பழக்கழிவுகள், குப்பைக் கூளங்கள், கழிவறைகள், சாக்கடைகள் மற்றும் துர்நாற்றம் வீசும் பகுதிகள் யாவுமே ஈக்கள் மிகவும் விரும்பிப் பயணிக்கும் சுற்றுலாத் தலங்கள் ஆகும். இவைகளை அழித்திட ஈ தெளிப்பான் தெளித்து விடுகிறோம். ஈக்களை அழித்திட இதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட சாக்லேட் வடிவ இனிப்பு மிட்டாய்கள் அப்பகுதியில் போட்டு விடலாம். மிட்டாயின் இனிப்புச் சுவை நாடி வரும் அவற்றை சுவைத்ததும் அப்படியே இறந்து விடும்.
ஈக்கள் மட்டுமன்றி கொசு, எலி, மூட்டைப்பூச்சி என அனைத்து பூச்சிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும் முற்றிலும் விடுபட அது அதற்கான அழிப்பு முறைகளையும் கையாண்டு வருகிறோம்.
வீட்டின் மரச்சாமான்களை நாசமாக்கும் கரையான்களை அழிப்பது எப்படி..?
பெரும்பாலும் செம்மண் மற்றும் இதர மண் வகைகள் தான் இந்தக் கரையானின் பிறப்பிடம். வீடு கட்டத் தொடங்கும் போதே பேஸ் மட்டம் எனப்படும் அதன் அஸ்திவாரத்தில் மேலே கட்டப்பட இருக்கும் அதன் சுற்றுச்சுவர்களின் அடிப் பகுதிகளில் ஆங்காங்கு துளையிட்டு, தேவையான அளவில் கரையான் மருந்தினை உள்ளே செலுத்தி விடுவோம். இதற்கு ஒரு சதுர அடிக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கிறோம். வீடு கட்டும் போது அஸ்திவாரத்திலேயே இந்த வேலையைச் செய்து விட்டால், அதற்கடுத்து இருபத்தைந்து முப்பது ஆண்டுகளுக்கு அந்தக் கட்டிடத்தில் கரையான் தொல்லை எட்டிக்கூடப் பார்க்காது.
புதிதாக கட்டப்படும் வீடுகளில் இப்படி ஆரம்பத்திலேயே கரையானை தடுத்துவிடலாம். ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளிலோ கரையான்கள் படிப்படியாக உற்பத்தியாகி வீட்டுச் சுவர்கள், மர சன்னல்கள், மரக்கதவுகள், அலமாரிகள் என மர வேலைபாடுகள் உள்ள அனைத்து இடங்களிலும் புகுந்துவிடும். கரையானின் ஆயுள் இருபதிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் என்கிறார்கள். அதற்கு மிகவும் பிடித்தமான உணவு மண், மரத்தூள், காகிதம், துணிமணிகள். சுவர்களின் உட்புற மண் பகுதியினை அரித்துத் தின்று விடும். அது வெளிப் பார்வைக்கு நமக்குத் தெரியாது. சுவரில் விரிசல்கள் விழும்.
குடியிருக்கும் வீடுகளுக்கு சுவரின் கீழ்ப் பகுதியில் துளையிட்டு ஆங்காங்கு கரையான் பூச்சிக்கொல்லி மருந்தினை உட்செலுத்தி விடுவோம். கரையான்கள் ஆங்காங்கே இறந்து அழிந்து விடும். அடுத்து பத்துப் பதினைந்து வருடங்களுக்கு அந்த வீட்டுச் சுவர்களுக்குள் மீண்டும் கரையான்கள் குடியேறாது. இதற்கு ஒரு சதுர அடிக்கு ரூ.10 கட்டணம் பெறுகிறோம்.
வீடுகள், ஹோட்டல்கள், மெஸ்கள், மிகச் சிறிய முதல் மிகப் பெரிய நட்சத்திர உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், ஸ்வீட் ஸ்டால்கள், ஹாஸ்டல்கள் போன்ற சகல இடங்களிலும் ஆயிரம் சதுர அடியில் தொடங்கி எத்தனை லட்சம் சதுர அடி பரப்பளவிலும் கூட பூச்சித் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் பணியினை சிறப்பான முறையில் செய்து தருகிறோம்” என்றார் தினேஷ். நோய் பரப்பும் பூச்சிகளை அழிக்க, மரச்சாமான்களை நாசமாக்கும் கரையான்களிடமிருந்து அவற்றை பாதுகாக்க ஆர்ஜி பெஸ்ட் கன்ட்ரோல், BEST CONTROL ஆக செயல்படும். தேவைப்படுவோர் 77089 12069, 04324 249069 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.