உலகம் முழுவதும் 2000 வாடிக்கையாளர்கள் முதலீட்டு தேவையை பூர்த்தி செய்யும் எம்.பெரியார் செல்வம் சிறப்புப் பேட்டி
உலகம் முழுவதும் 2000 வாடிக்கையாளர்கள் முதலீட்டு தேவையை பூர்த்தி செய்யும் எம்.பெரியார் செல்வம் சிறப்புப் பேட்டி
1980-களில் உலக பொருளாதாரமே ஸ்தம்பித்த நிலையில், பணக்கார நாடுகளான அமெரிக்க உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் நிலை தடுமாறிய போது, இந்திய பொருளாதாரத்தை பெருமளவு காப்பாற்றியது சேமிப்பு.!
நாடு எதிர்கொண்ட பொருளாதார தடுமாற்றங்களிலிருந்தும், அரசியல்வாதிகளின் பொருளாதார தவறுகளிலிருந்தும் நம்மை காத்து வருவது சேமிப்பு பழக்கம். பேரிடர் காலத்தில், பலரின் சேமிப்பே, இல்லாதவர்களுக்கு பெருமளவு உதவியாக அமைந்தது. சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்த அரசும், நிதி நிறுவனங்களும் மக்களின் சேமிப்பு குணத்தை பயன்படுத்தி இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்திட ஏராளமான நிதி வளர்ச்சித் திட்டங்களை பல்வேறு வடிவங்களில் உருவாக்கத் தொடங்கினர். இந்திய பெரு நிறுவனங்கள் தங்களது நிதித் தேவைகளை சமாளிக்க பங்கு வர்த்தகத்தில் அதீத கவனம் செலுத்தத் தொடங்கின.
வங்கியில் சேமிப்பு, வைப்பு நிதி (FIXED DEPOSIT), வருங்கால வைப்பு நிதி (PROVIDENT FUND), தங்கம், வெள்ளியில் முதலீடு, இன்ஸூரன்ஸ் திட்டங்கள், பங்கு சந்தையில் முதலீடு என ஏராளமான வாய்ப்புகளை மக்கள் பயன்படுத்தி வந்தனர். பின்னர் சேமிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் பெரும் ஏற்றத்தை உண்டாக்கியது. ரியல் எஸ்டேட் துறையில் அரசு கொண்டு வந்த புதிய சட்டங்கள் அத்துறையில் பெரும் பின்னடைவை உண்டாக்கியது. தங்கத்தின் விலையும் தொடர்ந்து சீரற்ற ஏற்றத்தில் இருந்தது. 1980ற்குப் பின் தான், பொது வெளியில் பங்கு வர்த்தகத்தின் மீது அபரிமிதமான பார்வை படத் தொடங்கியது. பங்கு வர்த்தகம் என்றால் என்ன என்று தெரியாத, கையில் பணம் வைத்திருந்த ஏராளமானோர் அதில் ஈடுபடத் தொடங்கினர்.
வங்கியில் கிடைக்கும் சேமிப்பிற்கான வட்டி குறைவு, வாழ்க்கை பாதுகாப்பைத் தவிர காப்பீட்டுத் திட்டங்களை, வருமானம் வரக் கூடிய முதலீடாக பெருமளவு ஏற்காத சூழல், சூதாட்டக் களமாய் மாறிய பங்கு வர்த்தகம் என முதலீட்டாளர்களை தடுமாறச் செய்த போது, பணவீக்கத்தை தாண்டி வருமானம் தருவது பரஸ்பர நிதி முதலீடு (MUTUAL FUND) மட்டுமே என்ற நிலை உண்டானது. தற்போது நிதி மேம்பாட்டு வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றி, கோலோச்சி வருவது பரஸ்பர நிதி வர்த்தகம் தான்.]
“1981ல் ரூ.10,000த்தை முறையே தங்கம், வெள்ளி, வைப்பு நிதி, வருங்கால வைப்பு நிதி மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் 40 ஆண்டுகள் கழித்து மார்ச் 2021ல் நமக்கு கிடைப்பது முறையே ரூ.2,73,023, ரூ.1,66,482… ரூ.3,05,781, ரூ.4,23,992, ரூ.28,58,026 ஆகும். இதில் 40 ஆண்டுகால சராசரி பணவீக்க விகிதம் 7.1 எனக் கணக்கிட்டால் நம்முடைய லாபத்தில் 1,65,910 ரூபாயை பணவீக்கமே விழுங்கி விடும்” என்கிறார் நிதி முதலீட்டிற்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவையில் ஈடுபட்டு வரும் ஸிtஸீ.எம்.பெரியார் செல்வம்.
எம்.பி.ஏ. பட்டதாரியான பெரியார் செல்வம், கடந்த 17 ஆண்டுகளாக மியூச்சுவல் பண்டு, காப்பீட்டு திட்டங்கள், பங்கு வர்த்தகம் மற்றும் நிதி ஆலோசகராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், “பங்கு வர்த்தகத்தில் முகவர்களாக செயல்படுபவர்கள் நிதி ஆலோசகராக செயல்படக் கூடாது” என்று செபி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இவர் நடத்தி வந்த WEALTH ENHANCER (செல்வத்தை மேம்படுத்துபவர்-அதாவது நிதி வளர்ச்சிக்கான ஆலோசகர்) என்ற பணியினை மாற்றி தற்போது “CATAMARAN INVESTMENT SERVICES’’ என்ற பெயரில் பரஸ்பர நிதி திட்டங்களை விநியோகித்து வருகிறார்.
உலகம் முழுக்க சுமார் 2000 வாடிக்கையாளர்களை கொண்டு அவர்களுக்கான நிதி சார்ந்த முதலீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறார். ரோட்டரி சங்கத்திலும், பன்னாட்டு மன்னிப்பு சபையிலும் அங்கம் வகித்து பல்வேறு சமுதாய, சேவைப் பணிகளிலும் தடம் பதித்து வருகிறார். அவரிடம் நிதி மேம்பாடு குறித்து நமது கருத்துக்களை கேள்வியாக முன் வைத்தோம்.
மியூச்சுவல் பண்டில் செய்யப்படும் முதலீடே சிறந்தது என்பது உங்கள் கருத்து.. அப்படித் தானே.?
ஒரேயடியாக அப்படிச் சொல்ல முடியாது. முதலீடு என்பது பெரும் லாபத்தை எதிர்நோக்கி, உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்கும் வகையில் இருக்கக் கூடாது. தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் என எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எங்களைப் போன்ற நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் தொகையை லாபகரமான, பாதுகாப்பான முதலீட்டை கணக்கில் கொண்டே முதலீடு செய்கிறோம். முதலீட்டாளர்களின் நிதிச் சூழலை அடிப்படையாக கொண்டு அவர்களின் தேவையை கணக்கீட்டே எது சிறந்த முதலீடு என அளவிடுகிறோம். அந்த வகையில் மியூச்சுவல் பண்ட் முதலீடு சிறந்தது எனக் கூறலாம்.
அதாவது நீண்ட கால முதலீடு என்றால் மட்டுமே நாம் பங்கு வர்த்தகம், மியூச்சுவல் பண்ட் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். அப்படித் தானே..?
அப்படி அர்த்தமல்ல. குறுகிய கால முதலீட்டிற்கும் குறைவான லாபமும், நீண்ட கால முதலீட்டிற்கு கூடுதல் லாபமும் கிடைக்கும் என்பதே சரியாகும். ஒரு நாளைக்கு பங்கினை வாங்கி விற்கவும், ஒரு மாதத்திற்கு வாங்கி விற்கவும் என நிதித் திட்டங்கள் உள்ளன. நமது தேவையை பொறுத்து நாம் முடிவு செய்ய வேண்டும்.
ஒரு தந்தை தன் மகனை 5ம் வகுப்பு வரை படிக்க வைத்தால், பிற்காலத்தில் மகனின் அதிகபட்ச வருவாய் நான்கிலக்கத்தை தான் தொடும். 10ம் வகுப்பென்றால் ஐந்திலக்கம். அதே மாஸ்டர் டிகிரி என்றால் வருவாய் ஐந்திலக்கத்தை தாண்டிச் செல்லும். அதாவது எத்தனை ஆண்டுகள் தனது மகனின் படிப்பிற்காக அவரது தந்தை செலவிட்டாரோ அதற்கு ஈடான வருவாய் தான் (படிக்கும் காலம் மற்றும் அதற்கான செலவு என இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்) பிற்காலத்தில் கிடைக்கும். மேலும், மகன் 5ம் வகுப்பில் முதல் ராங்க் பெறுவது முக்கியமில்லை. மாஸ்டர் டிகிரி வாங்கும் போது நல்ல மதிப்பெண் பெற வேண்டும். அதாவது முதலீடு என்பது நீண்ட காலமாகவும், அதே வேளையில் சிறந்த இடத்திலான முதலீடாகவும் அமைய வேண்டும். அந்த வகையில் மியூச்சுவல் பண்ட் சிறந்த முதலீடு என்று கூறலாம்.
40 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பு நிதியில் ரூ.10,000 போட்டால் இப்போது கிடைப்பது ரூ.3,05,751 மட்டுமே. அதாவது லாபம் வெறும் 1.6 சதவீதம் மட்டுமே..! இந்த கணக்கீட்டை மேலே சொன்னது போல் பணவீக்க விகிதாச்சரத்துடன் ஒப்பிட்டுத் தான் சொல்கிறேன். நமது லாபத்தை நாம் அப்படித் தான் கணக்கிட வேண்டும்.
ஒருவரின் தனிப்பட்ட, அவரின் நடப்பு பொருளாதார சூழலை கருத்தில் கொண்டே இலக்கை முடிவு செய்ய வேண்டும். குறைந்த, நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களை இதனடிப்படையில் தான் தேர்வு செய்ய வேண்டும்.
பங்கு வர்த்தகம் என்றால் அது சூதாட்டம் நிறைந்தது என்று கூறுவார்களே.?
முதலீட்டாளர்கள் நேரடி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு நஷ்டத்தை சந்திப்பதாலேயே இத்தகைய கருத்து நிலவுகிறது. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. இந்த இடத்தில் தான் எங்களை போன்று நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் பணத்திற்கு பங்கம் வராமல் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து தருகிறோம். அதுவே மியூச்சுவல் பண்டு வர்த்தகம்.
மியூச்சுவல் பண்டு வர்த்தகம் போல் வேறு எந்த தொழிலும் இந்த அளவிற்கு அபரிதமான வளர்ச்சியை எட்டி இருக்காது. நான் 2004ல் இத்தொழிலில் கால் பதித்த போது, வங்கியின் டெபாசிட் தொகையில் 5 சதவீதத்திற்கு உள்ளாகவே மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும நிதியாக இருந்தது. ஆனால் இப்போது மொத்த டெபாசிட் தொகையில் சராசரியாக நான்கில் ஒரு பங்கு மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் தொகையாக உள்ளது.
ஆரம்பத்தில், “எஸ்.பி.ஐ. பரஸ்பர நிதி” கூட மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் பெரிதாக கவனம் கொள்ளவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் தான் அவர்கள் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்போது இந்தியாவில் மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் முதலிடத்தில் இருப்பது எஸ்.பி.ஐ. தான். மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் மட்டுமே சுமார் 5 லட்சம் கோடியை கையாள்கிறார்கள். இரண்டாவது இடத்தில் ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் பண்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு பொருளாதார சிக்கல்களை மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. தற்போது, கொரோனா இரண்டாவது அலை என்கிறார்கள் நாம் என்ன தான் செய்வது?
ஒரு நடுத்தர குடும்பத் தலைவர் அவரது மாதாந்திர செலவை, 6 மாதத்திற்கு கணக்கிட்டால் வரும் தொகையை எப்போதும் சேமிப்பில் இருக்குமாறு வைக்க வேண்டும். அப்போது தான் வருவாய் பாதிக்கும் காலத்தில், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும்.
பெரும்பாலான நடுத்தர குடும்பத்தினர், “எங்க சேர்த்து வைக்கிறது… வரவிற்கு மீறி செலவு வருகிறது..” என அங்கலாய்ப்பது உண்டு. அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே அட்வைஸ். ‘சேமிப்பு’ என்பதை உங்கள் செலவாகக் கொள்ளுங்கள். மாதமானால் வீட்டு வாடகை தருவது போல் சேமிப்பிற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைத்துவிட்டு மிச்சத்தை செலவு செய்யுங்கள் என்பது தான் என்னுடைய பதிலாகும். அதுவே பேரிடர் காலத்தில் பெரும் உதவியாக இருக்கும்.
பங்கு வர்த்தக முகவர்கள் நிதி ஆலோசனை வழங்கக் கூடாது என செபி கூறுவது ஏன்?
பொதுவாக நாம் ஒரு நிறுவனத்திற்கு நிதி ஆலோசனை வழங்க வேண்டும் என்றால் நாம் அதற்குரிய, “நிதி ஆலோசகர் லைசன்ஸ்” (FINANCIAL CONSULTANT LICENSE) பெற வேண்டும். நிதி ஆலோசனையுடன் இன்சூரன்ஸ், வங்கி சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை நாங்கள் செய்து வருகிறோம்.
இப்போது ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் மியூச்சுவல் பண்ட் வர்த்தகத்தில் ஈடுபடுவதால், ஆலோசகர்கள் ஒரு சார்பு நிலையை மேற்கொள்ளக் கூடாது என்பதற்காக செபி இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆலோசகர், கன்சல்டண்ட், பைனான்சியல் மேனேஜ்மெண்ட் என எந்த பெயர்களையும் பயன்படுத்தக் கூடாது என செபி கூறுகிறது.
அது என்ன கேட்டமரான் இன்வெஸ்ட்மெண்ட் சர்வீசஸ்..?
தமிழில் கட்டுமரம் என்பதை தான் ஆங்கிலத்தில் கேட்டமரான் என்கிறோம். கட்டுமரத்தை கட்டமைப்பது எளிது. செலுத்துவதும் எளிது. அது கடலில் கவிழ்ந்தாலும் மூழ்காது. அது போல் தான் எனது நிறுவனம் உங்கள் பணத்திற்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டையே செய்து கொடுக்கும். உங்கள் தேவையை பூர்த்தி செய்யும்” என்றார்.
பங்கு வர்த்தகம், மியூச்சுவல் பண்ட் முதலீடு, காப்பீட்டு திட்ட முதலீடு, பான் சேவை என நிதி சார்ந்த அனைத்துவிதமான தேவைக்கும் “CATAMARAN INVESTMENT SERVICES” நிறுவனரான எம்.பெரியார் செல்வத்தை 98940 12007 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் முதலீட்டை பாதுகாப்புடன், லாபகரமாக மாற்றிக் கொள்ளலாம்.