சுற்றுச்சூழலை பாதிக்காத தரமான ஏசி தரும் திருச்சி எம்பயர் எலக்ட்ரானிக்ஸ்…
“என்னப்பா வெயிலு இது”,…. என்னா வெயிலு”….. “இன்னக்கி அநியாய வெயிலு”…..” வெயில் தாங்க முடியல”…..” “அக்னி நட்சத்திரம் தொடங்குறதுக்கு முன்னாடியே இவ்வளவு வெயிலா”…. “போன வருஷம் கூட இவ்வளவு வெயிலு இல்லையேப்பா..” – இந்த வார்த்தைகளெல்லாம் கோடை கால தொடக்கத்தில் ஆண்டு தவறாமல் நம் காதில் ஒலிக்கும் வாக்கியங்கள்.
தமிழகத்தில் அதிக வெப்பம் தாக்கும் மாவட்டங்களில் ஒன்றாக திருச்சி மாவட்டமும் அமைந்திருக்கிறது. பருவ நிலை மாற்றத்தினால் கோடை காலம் என்பது மூன்று மாதத்தை தாண்டி ஆண்டு முழுவதும் வெப்பம் தகிக்கிறது. கோடை வெப்பத்தை அடிப்படையாக கொண்டே விவசாயத்தை தாண்டி மனிதனின் அன்றாட வாழ்க்கையும் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
கோடை வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள நடுத்தர குடும்பத்தினர் கூட தங்கள் இல்லங்களில் குளிர்சாதன வசதியை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். 20 வருடங்களாக அனைத்து தரப்பு மக்களும் தங்கள் படுக்கையறையில் ஏசி அமைத்துக் கொள்ளும் விருப்பத்தை பூர்த்தி செய்து வருகிறது திருச்சி, தில்லைநகர், ரகுமானியாபுரத்தில் உள்ள எம்பயர் எலக்ட்ரானிக்ஸ். இதன் உரிமையாளர் கிங்ஸ் லீ.
திருச்சியில், ஏசி ஆடம்பரம் என்ற நிலையிலிருந்து இன்று மலிவு விலையில் ஏசி வரை, 20 வருடமாக, ஏசி வர்த்தக சாம்ராஜ்யத்தை எம்ப்பேயர் எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் பொறியியல் படித்த கிங்ஸ் லீ. வீடுகள், கடைகள், மால்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள், மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடம் வரை பல்வேறு களங்களில் குளிர்சாதன பெட்டியை அமைத்த அனுபவம் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது எம்பயர் எலெக்ட்ரானிக்ஸ்.
இதன் உரிமையாளர் கிங்ஸ்லி நம்மிடம் கூறுகையில், “தற்போது அரசு நிர்ணயித்துள்ள வரையறையின்படி ஒன்றரை டன் ஏசி முதல் 1500 டன் ஏசி வரை அமைத்து தருகிறோம். ஆரம்பத்தில் ஒரு இடத்தில், 5 டன் ஏசி அமைத்தால், ஒரு இரவில் 5 டன் ஏசியுமே முழுமையாக செயல்பாட்டில் இருக்கும். இதற்கு 9 முதல் 10 யூனிட் மின்சார செலவும் பிடிக்கும்.
ஆனால் தற்போது வந்துள்ள ஏசிக்களில் உள்ள தொழில்நுட்பம், ஏசி அமைத்த இடம், அங்கிருக்கும் ஆட்கள் உள்ளிட்டவற்றை அளவீடு செய்து, அதுவாகவே அதன் செயல்பாட்டு வேகத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும். இதன் மின்செலவு 3 யூனிட் மட்டுமே செலவாகும். இதனால் மின்கட்டணம் மிச்சமாகிறது. இதை அடிப்படையாக கொண்டு ஏசிக்களில் ஸ்டார் குறியீடு பின்பற்றப்படுகிறது. ஸ்டார் என்று குறிப்பிடுவது மின்சார சிக்கனத்தை குறிப்பிடுவதாகும்.
பைவ் ஸ்டார் ஏசி என்றால் விலை கூடுதலாக இருக்கும் என்று மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் பைவ் ஸ்டார் ஏசியில் மின் பயன்பாடானது மிகக் குறைந்த அளவில் செயல்படுத்தும் திறன் கொண்ட தொழில்நுட்பம் பயன்படுகிறது என்றே புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் பரிந்துரைக்கும் ஏசி இயந்திரத்தில் தரம் வாய்ந்த பில்டர்களே பயன்படுத்தப்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் ஏசி தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்கள் உள்ளனர். நிர்வாகம் சிக்கனம், அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாங்கள் விற்கும் ஏசியின் விலையானது மற்ற பெரிய ஷோரூம்களுடன் ஒப்பிடும் போது 5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை குறைவாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இடங்களில் ஏசியினை நிர்மாணிப்பதை தரமாகவும், குறைவான கட்டணத்திலும் செய்து தருகிறோம். விற்பனைக்கு பின் சேவை என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம்.
எங்கள் நிறுவனத்தில் TOSHIBA, HITACHI, VOLTAS, BLUE STAR. HAIYER, L.G., போன்ற நிறுவனங்களின் ஏசிகளை விற்பனை செய்கிறோம். Global warming, pollution என்று எவ்வித பாதிப்பும் இல்லாத ஏசிகளான osan free என்று சொல்லக்கூடிய R410 என்ற வகையான ஏசிக்களையே விற்பனை செய்கிறோம். தற்போது அரசு நிர்ணயித்துள்ள 22 டிகிரி மேலான குளிர் வசதிகளை மட்டுமே தரும் ஏசிக்களையே விற்பனை செய்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் இல்லங்களில், அலுவலகங்களில் குறைந்த விலையில் தரமான குளிர்சாதன வசதியை ஏற்படுத்த 82203 66662 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் மிகச் சிறப்பான குளிர்சாதன சேவையை பெறலாம்.