வருமான வரித்துறை தரும் பரிசுகள்
வருமான வரி படிவத்தை சரியான தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் தாமதக் கட்டணம் கட்டும் நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே வருமான வரியை உரிய தேதியில் கட்டத்தவறாதீர்கள். மேலும் வரி ஏய்ப்பு அல்லது வருமானத்தை மறைக்கும் குற்றத்தை செய்தால் சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களிடம் பான்கார்டு இருந்தாலும், உங்களின் வருவாய் ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருந்தால் நீங்கள் வரிக்கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை. அரசுக்கு முறையான வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு வரிக்கேற்றாற் போல் வெண்கலம், வெள்ளி, தங்கம், பிளாட்டினம் போன்ற சான்றிதழ்கள் இந்திய அரசால் வழங்கப்படுகிறது.