கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்..!
1. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வேறு ஒருவரிடம் பயன்படுத்தத் தராதீர்கள்.
2.OTP, CVV, PIN, UPI MPIN -யை யாரிடமும் பகிராதீர்கள்!
3. கடைகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது உங்களின் பார்வையில் இருக்குமாறு பயன்படுத்துவது நல்லது.
4. ஷாப்பிங் வலைதள முகவரி https://என்று இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பொருள்கள் ஆர்டர் கொடுக்கவும். வலைதளங்களில் அதில் உங்களின் கடன் அட்டை பற்றிய விவரங்களை சேகரித்து வைப்பதைத் தவிர்க்கவும்.
5. இமெயில் மற்றும் வாட்ஸ்அப்பில் வரும் சந்தேகத்திற்கிடமான வலைதள முகவரி லிங்குகளையும் க்ளிக் செய்ய வேண்டாம்.
6. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தும் போது, அந்த விவரங்கள் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும் வசதியையும், உங்களின் மெயிலுக்கு தகவல் வரும் வசதியையும் தங்களின் வங்கிக் கணக்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
7. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விவரங்களை மற்றவர்களுக்குத் தெரியுமாறு எங்கும் எழுதி வைக்காதீர்கள்.
8. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் ‘பின்’ (PIN) எண்ணை மாதத்துக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. அந்த ‘பின்’ எண்ணை அந்த அட்டையிலேயே எழுதி வைக்காதீர்கள்.
9. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் உள்ள விவரங்களை நண்பர்களோ, உறவினர்களோ, வங்கியிலிருந்தோ தொடர்பு கொண்டு கேட்டால் தயவு செய்து தராதீர்கள்.
10. இணையத்திலிருந்து எந்த விதமான செயலியைத் தரவிறக்கி பயன்படுத்தினாலும் அது பாதுகாப்பான செயலிதானா என்று உறுதிப் படுத்திக்கொண்டு பயன்படுத்துவது நல்லது.
11. கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே அதை வெளியில் கொண்டு போக வேண்டும். இல்லாவிட்டால், வீட்டில் வைத்து விட்டுச் செல்வதே சரி.