அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட்
இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் கூரியர் மற்றும் இ.காமர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்து வருகிறது.
பெருகி வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையினால் டெலிவரி தாமதப்படாமல் இருக்க பிளிப்கார்ட் தற்போது அதானி லாஜிஸ்டிக்கல் நிறுவனத்துடன் இணைகிறது. இதற்கென மும்பையில் 5,34,000 சதுர அடியில் ஒரு சரக்கு முனையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த முனையம் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.