வங்கி சேவையிலிருந்து வெளியேற சிட்டி பேங்க் முடிவு..!
அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி பேங்க் இந்தியாவில் கிரெடிட் கார்டு, ரீடெயில் பேங்கிங், வீட்டுக் கடன் மற்றும் சொத்து மேலாண்மை உள்ளிட்ட வர்த்தக பிரிவுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கிக்கு இந்தியாவில் 35 கிளைகள் உள்ளன. ஏறக்குறைய 4000 பணியாளர்கள் சிட்டி பேங்கின் நுகர்வோர் வங்கிச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட இயலாததன் காரணமாக 13 நாடுகளில் இருந்து நுகர்வோர் வங்கிக் சேவையிலிருந்து வெளிறே வங்கியின் சர்வதேச தலைமை செயல் அதிகாரி ஜான் ப்ரேஸர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிகின்றன.