கடந்த 2020ம் ஆண்டில், இந்தியாவில் விற்பனை ஆன மொபைல் போன்களில், 45 சதவீத போன்கள், ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, ‘கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் விற்பனையின் பங்கு, 45 சதவீதம் என்ற நிலையில், இதற்கு அடுத்த இடத்தில், பிரிட்டன் உள்ளது.இங்கு, 39 சதவீத போன்கள், ஆன்லைன் வாயிலாக விற்பனை ஆகியுள்ளன.இதற்கு அடுத்த இடத்தில், சீனா 34 சதவீத பங்களிப்புடன் உள்ளது. அமெரிக்காவில், 24 சதவீதம் மட்டுமே.மின்னணு பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டி பறக்கும் தென்கொரியாவில், ஆன்லைன் வாயிலாக வெறும், 16 சதவீதம் அளவுக்கே விற்பனை நடந்துள்ளது.