தமிழக திட்டக்குழுவிற்கு புதிய துணை தலைவர்
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், அவரது தலைமையில் செயல்படும் மாநில திட்டக்குழுவிற்கு பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் துணைத் தலைவராகவும் மற்றும் 9 உறுப்பினர்களை அறிவித்துள்ளார்.
பொருளாதாரப் பிரச்சனைகளை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கூறும் பேராசிரியர் ஜெ.ஜெய ரஞ்சன் சர்வதேச அளவில் பொருளாதாரம் சார்ந்து ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொழில், கல்வி, பொருளாதாரம் மற்றும் பிற துறைகளில் தமிழ்நாடு எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை புள்ளி விவரங்களுடன் ஆதாரபூர்வமாக ஜெயரஞ்சன் முன் வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.