கேஸ் சிலிண்டர் டெலிவரியில் அறிமுகமாகும் புதிய விதிமுறை
எல்பிஜி சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் அந்த சிலிண்டரை வீட்டில் டெலிவரி வாங்கும்போது மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) நம்பரை கூற வேண்டும். சிலிண்டர்கள் முறையாக டெலிவரி செய்யப்படுவதை உறுதி செய்யவும், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் இந்தப் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
சிலிண்டரை முன்பதிவு செய்தவுடன் சம்பந்தப்பட்ட சிலிண்டர் நிறுவனம் DAC code நீஷீபீமீ என்ற பாதுகாப்பு எண்ணை வாடிக்கையாளரின் மொபைல் நம்பருக்கு அனுப்பும். இந்த நான்கு இலக்க நம்பரை டெலிவரி பணியாளரிடம் தெரிவித்தால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். அதேபோல, சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு மட்டுமே இந்த ஓடிபி எண் அனுப்பப்படும். இந்தப் புதிய நடைமுறைக்கு மாறாத வாடிக்கையாளர்கள் சிலிண்டர் டெலிவரி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.