ஜன்தன் கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு ..!
பொதுத் துறை வங்கியில் ஜன்தன் கணக்கு தொடங்கியவர்கள் அத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்து அதைப் பயன்படுத்தினால் ரூ.2 லட்சம் வரையில் விபத்துக் காப்பீட்டு வசதியைப் பெறலாம்.
இந்த விபத்துக் காப்பீட்டுச் சலுகையைப் பெறுவதற்கு ரூபே கார்டை 90 நாட்களுக்கு பயன்படுத்தியிருக்க (ஸ்வைப்) வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும். அதேபோல, இந்த வங்கிக் கணக்கில் ஆதார் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எஸ்.பி.ஐ. வங்கியின் ஜன் தன் திட்டத்தின் கீழ் இது வரை கணக்கு தொடங்கியவர்களும், இனி கணக்கு தொடங்குபவர்களும் இச்சலுகையைப் பெறலாம்.