அனைத்து 12 இலக்க எண்களும் ஆதார் எண்கள் இல்லை; எச்சரிக்கும் UIDAI
இந்தியாவில் அரசு பரிவர்த்தனைகள், வங்கியில் கணக்கு தொடக்கம், வருமான வரி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் தேவைப்படுகிறது. ஆதாரின் 12 இலக்க எண்ணை திரித்து புதிய மோசடிகள் நடப்பதாக யுஐடிஏஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது 12 இலக்க எண்கள் அனைத்தும் ஆதார் என்று கருதக்கூடாது என்பதே அந்த எச்சரிக்கை. மோசடி புகார்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை யுஐடிஏஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஒருவரின் ஆதார் தேவைப்பட்டால், அந்த நபர் கொடுத்த ஆதார் எண் சரியானதா என்பதை சரிபார்க்கவும்.
ஆதார் எண்ணை சரி பார்க்க, UIDAI இணையதள பக்கத்தின் லிங்கான Resident.uidai.gov.in/verify க்கு சென்று, அங்கு நீங்கள் பெற்ற 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். CAPTCHAவை நிரப்பிய பின், சரி பார்ப்பு பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இதைச் செய்த பிறகு, திரையில் 12 இலக்க எண்ணின் நம்பகத்தன்மையைக் காண்பீர்கள். அது எண் சரி பார்க்கப்படவில்லை என்றால், நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.