கொரோனாவால் உயர்ந்த தங்க நகைக் கடன்!
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொண்ட ஊரடங்கு காரணமாக பொதுமக்களிடையே பணநெருக்கடி மற்றும் எதிர்பாராத செலவுகள் அதிகரித்துள்ளதால் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மார்ச் 2020 முதல் கொரோனா பரவல் தொடக்கத்திலிருந்து 2021 மே மாதத்திற்குள் நகைக் கடன் நிலுவை வங்கிகளில் மட்டும் ரூ.33,308 கோடியாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தால் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் மூலமாக தங்க நகை கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக கூறும் WORLD GOLD COUNCIL, கடந்த 2020 நிதியாண்டில் ரூ.3,44,800 கோடியிலிருந்து 2021 நிதியாண்டில் ரூ.4,05,100 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தங்க நகை கடன்கள் 465 சதவீதம் உயர்ந்து ரூ.20,987 கோடியாக உள்ளது. தங்க நகை கடனுக்கான அதிக தேவை கிராமப்புறங்கள், குறைந்த வருமானம் கொண்ட குழு மற்றும் மைக்ரோ யூனிட் களில் உள்ளதாக கூறும் எஸ்பிஐ, தங்க நகை கடனுக்கு 7.50 சதவீத வட்டி வசூலிக்கிறது.
தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்களில் ஒன்றான மணப்புரம் பைனான்ஸ், முந்தைய ஆண்டில் ரூ.168,909.23 கோடியிலிருந்து மொத்த நகை கடன் வழங்கல் ரூ.263,833.15 கோடியாக உயர்ந்தது. மார்ச் 31, 2021 நில வரப்படி, அதன் நேரடி நகை கடன் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
25.9 லட்சமாக இருந்துள்ளது.