தங்கம் vs வைப்பு நிதி..? எதில் முதலீடு செய்தால் லாபம்?
சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ளது. கொரோனாவின் முதல் அலை பரவிய காலகட்டத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகளுக்கு 28 சதவீத ரிட்டன் கிடைத்துள்ளது. அதேநேரம், பங்கு வர்த்தகத்தில் 16 சதவீத லாபம் மட்டுமே கிடைத்துள்ளது.
அதேபோல வைப்பு நிதித் திட்டங்களில் (FIXED DEPOSIT SCHEME) 6 சதவீதம் மட்டுமே ரிட்டன் கிடைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் தங்கம் இறக்குமதியும் தங்கம் பயன்பாடும் குறைந்து போனது. நாட்டு மக்களிடையே நிதி நெருக்கடி நிலவியதால் தங்கம் பயன்பாடு மந்தமாக இருந்தது.
ஊரடங்கு தளர்விற்குப் பின்பு தங்கத்தின் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் மீதான முதலீடுகளில் 100 சதவீத ரிட்டன் கிடைத்துள்ளதாகவும், அடுத்து வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம், FD திட்டங்களைப் பொறுத்தவரையில் அதிகபட்சம் 7 சதவீத ரிட்டன் மட்டுமே கிடைக்கிறது. எனவே வைப்பு நிதித் திட்டங்களைக் காட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடுகள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.