வங்கி திவாலானாலும் இனி வாடிக்கையாளருக்கு கவலை இல்லை
கடந்த வருடம் மத்திய அரசு வங்கி டெபாசிட்களுக்கு அளிக்கப்படும் ஞிமிசிநிசி அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளவை ரூ.1 லட்சம் அளவில் இருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.5 லட்சம் வரையிலான தொகைக்குப் பாதுகாப்பு அளித்தது. இந்த மாற்றத்தின் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகையின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. வங்கி திவால் ஆனாலும் ஞிமிசிநிசி அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு மூலம் ரூ.5 லட்சம் வரை திருப்பிப் பெற முடியும்.
சமீபத்தில் தீர்வு காணப்பட்ட பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோ ஆப்ரேட்டிவ் வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு இன்னும் வைப்புத் தொகை கொடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையைச் சமாளிக்கவே இந்தப் புதிய சட்டத்தின் மூலம் 90 நாட்களுக்குள் டெபாசிட் தொகை ஞிமிசிநிசி அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு மூலம் அளிக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இப்புதிய சட்டம் மூலம் பிஎம்சி வங்கி, யெஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி போன்ற திவாலான மற்றும் மோரோடோரியம் கீழ் வைக்கப்படும் வங்கிகளின் வைப்பு நிதியாளர்கள் பணம் காக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பருவகால நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.