பட்ஜெட்டை சமாளிக்க வீட்டிலேயே தயாரிக்கலாம் பயோகேஸ்
மாதாமாதம் உயரும் சமையல் எரிவாயு விலை உயர்வால் நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் ‘துண்டு’ விழுவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு என்னதான் தீர்வு எனக் கேட்டால், இருக்கவே இருக்கிறது பயோ கேஸ் (biogas). நம் வீட்டில் உபயோகிக்கும் அரிசி கழுவும் தண்ணீர், சாதம் வடிக்கும் தண்ணீர், பழக்கழிவுகள், உணவுக்கழிவுகள் ஆகியவற்றை சேமித்து அவற்றை நொதிக்கச் செய்து அதிலிருந்து அவற்றுடன் சாணம் கலப்பதால் வெளியேறும் வாயுவே பயோ கேஸ்.
இந்த biogas unit வைப்பதற்கு குறைந்த இடமே போதுமானது. இந்த பயோ கேஸ் யுனிட்டில் உள்ள waste inlet, waste outlet என இரண்டு பகுதிகள் உள்ளன. தொடக்கத்தில் waste inlet பகுதியில் மாட்டு சாணத்தை போட வேண்டும். இதில் கேஸ் உற்பத்தி ஆக 2 முதல் 4 வாரம் ஆகும். 4 வாரத்திற்கு பிறகு வீட்டில் உபயோகிக்கும் தினசரி கழிவுகளை போட்டு பின்னர் அதிலிருந்து வெளியேறும் வாயுவை gas outlet பகுதியிலிருந்து வெளியேறி gas storage பகுதியில் சேகரமாகும். பின்பு அதிலிருந்து பைப் மூலம் அடுப்பிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தி கொள்ளலாம். உற்பத்தியாகும் எரிவாயு biogas unit-ல் உள்ள storage bag-ல் தான் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த biogas storage பையினை வெயில் படாமல் நிழலில் மாட்டி இருந்தால் 10 முதல் 12 வருடங்கள் வரை உபயோகப் படுத்தலாம்.
waste outlet பகுதியை திறந்தால் நாம் கொட்டிய கழிவுகள் திரவமாக வெளியேறி விடும். இந்த திரவ கழிவுடன் 1 மடங்கிற்கு பத்து மடங்கு என்ற அளவில் தண்ணீர் கலந்து செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். செடிகள் இல்லையென்றால் இந்த திரவ கழிவை தண்ணீருடன் கலக்காமல் வீட்டைச் சுற்றி தெளித்தால் கொசுக்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
bio gasunit-ன் அளவை பொறுத்து கழிவுகளின் அளவு அமைகிறது. சராசரியாக ஒரு சின்டக்ஸ் டாங்க் தொட்டியில் தினசரி சுமார் 8 கிலோ வரையிலான கழிவுகளை போடலாம். இதில் 8 கிலோ கழிவுகளை போட்டால் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்திற்கான சமையல் எரிவாயு நமக்கு கிடைத்துவிடும்.
கழிவுகளின் அளவை பொறுத்தே நமக்கு எரிவாயு கிடைக்கும். இந்த பயோ எரிவாயுவினை பயன்படுத்த இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட biogas-ஐ உபயோகப்படுத்தினால் வழக்கமான கேஸ் அடுப்பை மூன்று மடங்கு பலனை அனுபவிக்கலாம். தீக்குச்சியின் மூலம் மட்டுமே இந்த பயோ வாயுவினை எரியூட்ட முடியும்.
சொற்ப முதலீட்டில் நீங்கள் வீட்டிலேயே பயோ கேஸ் தயாரித்து நாளுக்கு நாள் அதிகரிக்கும் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.