இது டூபாக்கூர் இன்சூரன்ஸ் நிறுவனம்..!
எச்சரித்த ஐஆர்டிஏஐபெங்களுரை தலைமையகமாக கொண்டு, கிருஷ்ணராஜபுரம், இன்சூரன்ஸ் இன்போ பில்டிங், தேவசந்திரா, பெங்களூர் – 560036, என்ற முகவரியிலிருந்து செயல்படும் டிஜிட்டல் நேஷனல் மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனம்DNMI.co.ltd., என்ற தளத்தின் மூலம் -https://dnmins.wixsite.com/dnmins, என்ற இணையதள முகவரியுடனும், digitalpolicyservices@gmail.com என்ற இ-மெயில் ஐடி கொண்டு இன்சூரன்ஸ்களை விற்பனை செய்து வருகின்றது.
இந்நிலையில் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையமான மிஸிஞிகிமி, டிஜிட்டல் நேஷனல் மோட்டார் இன்சூரன்ஸ்(DIGITAL NATIONAL MOTOR INSURANCE) நிறுவனத்தில் இன்சூரன்ஸ் வாங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் இந்த நிறுவனத்திற்கு இன்சூரன்ஸ் திட்டங்களை விற்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. உரிமம் பெறாத இந்த காப்பீட்டு நிறுவனத்துடன் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம் என்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.