வால்வோ கார்கள்
விலை உயர்வு
ஆடம்பர கார் நிறுவனமான வால்வோ, அதன் கார்களின் விலையை, மாடலை பொறுத்து, 1-முதல், 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தி உள்ளது.
ஆனால் ஏப்ரல் 12 வரை முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது.
இந்நிறுவனம் இந்தஆண்டின் துவக்கத்தில், கார்களின் விலையை உயர்த்தியது. இருப்பினும், சரக்கு போக்குவரத்துக்கான செலவு அதிகரிப்பு, உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு, உலகளவில் சப்ளையில் ஏற்பட்டிருக்கும் தடை ஆகியவை காரணமாக, மீண்டும் ஒரு முறை விலையேற்றத்தை அறிவித்துள்ளது.