திருச்சியில் சுமைதூக்கும் இஸ்லாமிய கூலித்தொழிலாளர்களுக்கு 13 வகையான உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு.
திருச்சியில் சுமைதூக்கும் இஸ்லாமிய கூலித்தொழிலாளர்களுக்கு 13 வகையான உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு.
திருச்சியில் சுமைதூக்கும் இஸ்லாமிய கூலித்தொழிலாளர்களுக்கு ரமலான் நோன்பு வெகுமதி வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களின் புனிதமான ஈகைத்திருநாளான ரமலான் பெருநாள் வரும் மே மாதம் 3 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி வெங்காய தரகுமண்டி வர்த்தகர் சங்கத்தில் பணிபுரியும் சுமைதூக்கும் கூலித்தொழிலாளர் சங்கத்தினரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு வெகுமதி வழங்கப்பட்டது.
இதில் புத்தாடை , உணவுப்பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் அடங்கிய தொகுப்பினை திருச்சி மாவட்ட சுமைதூக்கும் கூலித்தொழிலாளர் சங்கத்தலைவர் எஸ்.கந்தன் தலைமையிலான நிர்வாகிகள் வழங்கினர்.
5கிலோ அரிசி, இனிப்பு , நெய் ,ரவை உள்ளிட்ட 13 வகையான உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு.