ஹூண்டாய் நிறுவனம், மின்சார வாகன பிரிவில், 2028ம் ஆண்டுக்குள், 6 மாடல்களில் மின்சார கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
‘ஐயோனி 5’ என்ற மின்சார கார், நடப்பு ஆண்டு பிற்பகுதியில், பண்டிகை காலத்தை ஒட்டி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக இவ்வாண்டு இறுதியில், ‘ஐயோனி 5’ கார் அறிமுகப்படுத்த உள்ளது.விரைவில் அடுத்தடுத்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என, ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.