உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலகளவில் எரிபொருள் விலை அதிகரிக்கும் . அதனால், பணவீக்கமும் உயரும்.
இதனை கருத்தில் கொண்டு“ராய்ட்டர்ஸ்” நடத்திய ஆய்வில், 46 பொருளாதார அறிஞர்களில் மூவர் தவிர மற்றவர்கள், ஜூனில் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் கிட்டத்தட்ட 7%-ஐ நெருங்கி உள்ளது. இது, ரிசர்வ் வங்கியில் இலக்கான 6 %-ஐ விட அதிகமாகும்.ஏப்ரலில் இது மேலும் அதிகரிக்ககூடும். அதனால் 0.25 % அளவுக்கு வட்டி அதிகரிக்கலாம் என 42 நிபுணர்கள் தெரிவித்துஉள்ளனர்.