உலகளவில் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், பெர்னார்டு அர்னால்ட், பில் கேட்ஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தை, அதானி பிடித்துள்ளார். அதாவது பங்குச் சந்தை பிதாமகன் வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளி, உலகளவில், 5வது மிகப் பெரிய பணக்காரராக ஆகியுள்ளார்.
‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்’ தகவலின்படி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 9.52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வாரன் பபெட்டின் நிகர சொத்து மதிப்பு 9.37 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. . இது கிட்டத்தட்ட 56.2 சதவீத உயர்வாகும்.
இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து அதானி குறிப்பிடும்போது, இன்னும் 10 ஆயிரம் நாட்களில் அதாவது, 2050வது ஆண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 2,310 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று தெரிவித்தார்.