அனைத்து விதமான தங்க நகைகளும் இனி ‘ஹால்மார்க்’ முத்திரையிடப்பட்டே விற்பனை செய்யப்பட வேண்டும் எனும் விதிமுறை, மே 31-ல் இருந்து அமலுக்கு வந்தது.
இந்திய தர நிர்ணய கழகத்தின் விதிமுறையின் கீழ், 6 வகை சுத்தமான தங்க நகைகளுக்கு, அதாவது 14,18,20,22,23,24 கேரட் தங்க நகைகளுக்கு மட்டும் ஹால்மார்க் பெற வேண்டும் என்றிருந்தது.. 19, 21 கேரட் நகைகளுக்கு இல்லை.
ஆனால், மே 31 முதல் அனைத்து வகை கேரட் நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை அவசியம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை கடந்த ஏப்ரல் 4ம் தேதியே, இந்திய தர நிர்ணய கழகம் வெளியிட்டுள்ளது. தற்போது எந்தெந்த மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பது குறித்த பட்டியலையும், வெளியிட்டு உள்ளது.