உதய்பூரை சேர்ந்த , ‘ஷா பாலிமர்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரிபங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், அதிக அடர்த்தி கொண்ட, ‘பாலிபுரொபைலீன் மற்றும் பாலிஎத்திலீன்’ பைகள் மற்றும் சமையலுக்கான ‘அவன்’ சாதனத்துக்கு தேவைப்படும் ‘பாலிமர்’ அடிப்படையிலான பொருட்களை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம் 1.02 கோடி புதிய பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. அதில் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் இருக்கும் எந்த பங்கையும் விற்பனை செய்வதில்லை என்றும்,
பங்கு வெளியீட்டால் கிடைக்கும் பணத்தை, விரிவாக்க நடவடிக்கைகளுக்கும், புதிய திட்டங்களுக்கான நடைமுறை மூலதன தேவைகளுக்கும், சிலவகை கடன்களை அடைக்கவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதன் வருவாய், 2020 – 21ம் நிதியாண்டில் 12.16 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 55.07 கோடி ரூபாயாக உள்ளது.