ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘கிரெடிட் கார்டு’ வினியோகத்திற்கான புதிய விதிமுறைகள்
நுகர்வோர் கோரிக்கை வைக்காமல் கார்டு வழங்கக்கூடாது, கார்டு பயன்பாட்டிற்குரிய கட்டணம் மற்றும் வட்டி விகிதங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் .
வட்டி விகிதங்கள் அளவுக்கு அதிகமாக இருக்க கூடாது. மேலும், கிரெடிட் கார்டை நுகர்வோர் மூடிவிட கோரினால் ஏழு நாட்களுக்குள் கார்டை மூட வேண்டும். கார்டில் நிலுவைத்தொகை இல்லாமல் இருக்கும் பட்சத்தில், தாமதமாகும் நாட்களுக்கு நுகர்வோருக்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும்.
ஒராண்டுக்குமேல் பயன்படுத்தாது இருக்கும் கிரெடிட் கார்டை நுகர்வோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, கார்டில் நிலுவைத்தொகை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கார்டை மூடிவிடவேண்டும்.
இதனை கிரெடிட் பீரோக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். கார்டு மூடப்பட்ட பின், கார்டு கணக்கில் மிச்சம் இருக்கும் தொகையை பயனாளியின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும்.
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் , கிராமப்புற வங்கிகள் அல்லாத மற்ற வங்கிகள் தனியாக அல்லது கார்டு நிறுவனங்களுடன் இணைந்து கார்டு வழங்கலாம். அதே போல, 100 கோடிக்கு மேல் நிதி கொண்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து அனுமதி பெற்று கார்டு வெளியிடலாம்.
இதன் காரணமாக தகுதி உள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்களும் கார்டு வெளியிடுவதில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். வங்கிசாரா நிதி நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ள தொழில்நுட்பம் சார்ந்த நிதிநுட்ப நிறுவனங்களும் கார்டு வெளியிடும் வாய்ப்பை பெறும்.
இதனால் போட்டிகள் அதிகமாகி, நுகர்வோருக்கான புதிய வசதிகள் அறிமுகமாகும் .பின்னர் கார்டு சேவை தொடர்பான புதிய நெறிமுறைகள் மேலும் வெளிப்படையான தன்மை ஏற்பட்டு, நுகர்வோர் நலன் காக்கப்படும்.
கிரெடிட் கார்டின் பயன்பாடும் அதிகரிக்க இது வழிவகுக்கும் .