திருச்சியில் நடைபெற்ற வீடு கட்டுவோருக்கான கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.
திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியின் கட்டிடவியல் துறை மற்றும் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து வீடு கட்டுவோர்களுக்கான கண்காட்சி நடத்தியது.
கண்காட்சியை இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஆர்க்கிடெக்ஸ் அமைப்பின் உப தலைவர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
எம்.ஏ.எம் கல்லூரி முதல்வர் சூசன் கிறிஸ்டினா தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் கல்லூரியின் கட்டிடக்கலை, மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 16 வகையான ஸ்டால்களை அமைத்திருந்தனர்.
இதில் அதிநவீன நேரடி மின்னோட்ட கட்டிடம். பசுமை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் இடம்பெற்றிருந்தது.
கட்டுமானத்துறையில் உள்ள பல்வேறு துறைகள் குறித்தும் சிமெண்ட் , செங்கல் , நீர்சுத்திகரிப்பு பழுதுநீக்குதல் மற்றும் மீட்டுருவாக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்திய இந்த கண்காட்சியில் குண்டூர், செம்பட்டு, கொட்டப்பட்டு, மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டு பலனடைந்தனர்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துறைத்தலைவர்கள் சசிகலா, ராக்கம்மாள் உட்பட பேராசிரியர்கள் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவன பொறுப்பாளர்கள் செய்திருந்தார்.