கார் லோன் வாங்க இனி 30 நிமிடம் போதும்…
சொந்தமாக கார் அல்லது பைக் வாங்க வேண்டுமென்பது எல்லோருக்கும் கனவாக இருக்கும். தற்போது வாகனகடன் மூலம் பல்வேறு குடும்பத்தினர் சொந்த கார் அல்லது பைக் ஆசையை நிறைவேற்றி கொள்கின்றனர். ஆனால் இந்த வாகன கடனுக்காக ஏற்படும் அலைச்சல் மற்றும் மனஉளைச்சலினால் சிலர் லோன் என்ற பக்கமே செல்ல பயப்படுகிறார்கள்.
இதற்காக தீர்வு தான் தற்போது ஹெச்டிஎஃப்சி வங்கி ‘Express Car Loan’ திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 30 நிமிடங்களிலேயே கடன் கிடைத்துவிடும். கார் கடன் வாங்குவதற்கான மொத்த வேலையும் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்களின் அலைச்சல் மற்றும் நேரம் விரயமும் குறைவது மகிழ்ச்சியை அளித்துள்ளது. இச்சேவையின் மூலம் 30 நிமிடங்களிலே இருந்த இடத்தில் இருந்து லோன் மூலம் கார் வாங்கி விடலாம்.