வங்கி வாடிக்கையாளர்களே… இனி பணபரிவர்த்தனைக்கு இது கட்டாயம்….
இனி வங்கி கணக்கில் ஓராண்டில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் மேல் பணம் எடுத்தாலும், பணம் போட்டாலும், பான் எண் அல்லது ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் வருகின்ற 26-ந் தேதி முதல் அமலாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்விதிமுறைகள் வங்கிகளுக்கு மட்டுமின்றி, தபால் அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆகையால், இனி பணபரிவர்த்தனையின் போது ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயம்.