நெட்ஃபிளிக்ஸ் பயனாளர்கள் கவனத்திற்கு.. புதிய திட்டம் அறிமுகம்
உலகின் முன்னணி ஓடிடி நிறுவனமாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் படங்கள், வெப்சீரிஸ் உள்ளிட்டவற்றை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இந்நிலையில், திடீரென நெட்ஃபிளிக்ஸ் சந்தா கட்டணத்தை உயர்த்தியது. இதனால் நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது.
இதனையடுத்து, தற்போது நெட்ஃபிளிக்ஸ் குறைந்த கட்டணத்திலான பிளான்களை அறிமுகப்படுத்தவும், வீடியோக்களில் விளம்பரங்களை கொண்டுவரப்போவதாக நெட்ஃபிளிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹாஸ்டிங்ஸ் கடந்த மாதம் செய்தியாளர்களை சந்திந்த போது தெரிவித்துள்ளார்.
மேலும், பாஸ்வோர்ட் பகிர்வதால் தான் சப்ஸ்கிரைபர்களை இழப்பதாகவும், பாஸ்வோர்ட் பகிர்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் விளம்பரத்துடனான சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.